top of page

10 th Anniversary Message

Message for members of the Perth Tamil Catholic Community -

From the Most Rev Timothy Costelloe SDB

Archbishop of Perth

 

 Read Full Message Here

 

------------------------------------------------

 

"With strong leadership and its monthly Mass in Tamil, many people have found in the Tamil Community, a welcome and a fraternity that help them in their family life and in finding a worthy place in the general community"

 

-   Most Rev B J Hickey Archbishop Emeritus of Perth

 

 Read Full Message Here

------------------------------------------------

"The Tamil Catholic Community has worked hard to establish itself and to provide for its pastoral needs. It was very encouraging to hear of the efforts being made to reach more and more Tamil speakers in WA"

-   Most Rev Donald Sproxton Auxiliary Bishop

 

Read Full Message Here

 

------------------------------------------------

 

"The Perth Tamil Catholic Community has been particularly effective in assisting newly arrived Tamil Speakers to settle and integrate into the local community as well"

Rev Deacon Greg Lowe

Read Full Message Here

------------------------------------------------

 

"பல இன மக்களுக்கிடையே வாழுகின்ற இப்பங்கின் தமிழ் மக்களாகிய நீங்கள் நன்கு ஆங்கிலம் தெரிந்திருந்தும் தம் தாய் மொழியாம் தமிழில் திருப்பலிபூசை வேண்டும் என்று கேட்டு தமிழில் கொண்டாடி இந்த பெருவிழாவோடு பத்து ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது"

Rev Father Terry Raj, Parish Priest

Read Full Message Here

------------------------------------------------

தமிழ் கூறும் மக்களின் ஆன்மிக வாழ்வு மென்மேலும் சிறந்திட, முழுமையாய் மலர்ந்திட, முழுமையை நோக்கி நடந்திட இன்னும் பற்பல  ஆண்டு நிறைவு விழாக்களை கண்டிட உளமார ஜெபிக்கின்றோம், எம் வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம்.

Northam Servite Sisters

Read Full Message Here

------------------------------------------------

 

 

Rev Father Renald - Read full Message Here -  

------------------------------------------------

Rev Father Gilbert - Read full Message Here -  


 

2.png
WhatsApp Image 2019-10-24 at 5.23.52 AM.

தமிழ் நெஞ்சங்களுக்கு வாழ்த்துக்கள்.
 

பெர்த் தமிழ் கத்தோலிக்க சங்கம் உருவாகி பத்து ஆண்டுகள் நிறைவு பெற்றமைக்கு வாழ்த்துக்கள். இந்த நன்னாளை நினைவு கூறும் வகையில் பெர்த் தமிழ் சங்க இணையதளம் ஆரம்பிக்கும் அரிய முயற்சி பாராட்டுக்குரியது. இந்த இணையதளம் மூலம் மேலும் பல தமிழ் நெஞ்சங்கள் ஒருவர் ஒருவரை அறிந்து கொள்ள, தொடர்பு கொள்ள ஓர் அரிய வாய்ப்பை வழங்கும் என்று திடமாய் நம்புகின்றேன்.

       இந்த இணையதளம் உருவாக உழைத்த அனைத்து உள்ளங்களையும் ஆண்டவர் அபரிமிதமாக ஆசிர்வதிக்க வேண்டும் என்று வாழ்த்தும்

மரியின் ஊழியர்,

அருட்தந்தை ஸ்டீபன் ஆரோக்கியதாஸ்,

1.png

"என் ஆன்மா ஆண்டவரை ஏற்றி போற்றுகின்றது" (லூக்.1:47)

 தேன் மொழியில் பத்தாண்டுகளாய் நம் பண்பாடும் பாரம்பரியமும் சிறப்பாய் வெளிப்படும் விதமாய் ஆஸ்திரிய மண்ணில் ஆண்டவரின் இக்கோவிலில் நாம் வழிபாடு செய்யும்படி இறைவன் ஆசீர்வதித்திருக்கிறார். நாம் மகிழ்கிறோம், நன்றியால் துதிக்கிறோம்.

 தாய்மொழி நம் உணர்வையும் உறவையும் புடம்போடுகிறது. எனவே, தாய்மொழியில் வழிபாடு நிகழுமானால் அது ஆத்மார்த்தமான புனிதத்தை மனிதத்தில் விதைக்கும். இதையே திருஅவையும் முன்மொழிந்துள்ளது: "கிறிஸ்துவின் நற்செய்தி மனிதரின் வாழ்வையும் பண்பாட்டையும் இடையிறாது புதுப்பிக்கின்றது. ஒவ்வொரு நாட்டினுடையவும், காலத்தினுடையவும் அருள்நெறி வளங்களையும் சிறப்பியல்புகளையும், மேலுலக செல்வங்களாய் உள்ளிருந்தே வளப்படுத்துகிறது, உருவாக்குகிறது, நிறைவுக்கு கொணர்கிறது, கிறிஸ்துவில் புதுப்பிக்கிறது". (இஉதி எண் 58).


 மாதத்தின் இறுதி ஞாயிற்றில் நம் இளையோரும், சிறாரும், இன்னிசை முழங்கியும், தங்கள் பல்வேறு திறமைகளை வெளிக்கொணர்ந்தும் இறைவனைப் புகழும் பெர்த் நகரமே தேன் மழையில் நனைகிறது. இது போன்ற ஆன்மீகத்திலும், அயலர்க்கு உதிவிக்கரம் நீட்டுவதிலும் நம் கிறிஸ்த்தவ வாழ்வு மக்களுக்கு எடுத்துக்காட்டாகும்.
 

ஆசியுடன்,
சகோ, சித்ரா ஜஸ்டின்

4.png

அன்புக்கும் பாசத்துக்கும் உரிய கத்தோலிக்க தமிழ் நெஞ்சங்களுக்கு என்னுடைய அன்பார்ந்த வாழ்த்தும் ஆசீரும்.


     தங்களுடைய பணி தொடங்கி பத்து ஆண்டுகள் நிறைவு செய்கின்ற இந்த வேளையிலே இறைவனுக்கு நன்றி சொல்லி நம்முடைய குடும்பங்கள் அனைத்துக்காகவும் நான் செபிக்கின்றேன். ஆசீர் அளிக்கின்றேன். என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். தொடர்ந்து தங்களுடைய வாழ்வும் பணியும் சிறக்க ஆண்டவர் அருளவேண்டும் என்றும் என்னால் ஆன உதவியை தொடர்ந்து உங்களுக்கு செய்ய நான் காத்து இருக்கிறேன் என்றும் தெரிவித்து எல்லா நெஞ்சங்களுக்கும் அன்பு உள்ளங்களுக்கும் தமிழ் நெஞ்சங்களுக்கும் என்னுடைய அன்பார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
 

நன்றி ஆசீர்
தந்தை இரத்தினராஜ் அவர்கள்

3.png

“எல்லா புகழும் நன்றியும் இறைவனுக்கே .” 

கிறிஸ்துவில் அன்புமிக்க பெர்த் தமிழ் கத்தோலிக்க மக்களுக்கு Gosnells’ புனித மரியின் ஊழியர் சபை சகோதரிகளின் அன்பான வாழ்த்துக்கள். கடந்த பத்து ஆண்டுகளாய் உங்களை வழிநடத்திய இறைவனுக்கு உங்களோடு இணைந்து நன்றி கூறுகின்றோம். 

கடந்து வந்த வருடங்களில் உறவோடும் மகிழ்வோடும் உற்சாகத்தோடும் பெற்றுக்கொண்ட விசுவாசத்தில் இன்னும் ஆழப்பட நீங்கள் எடுத்த, செய்த அணைத்து செய்லகளுக்காக இதயம் நிறைந்த வாழ்த்துக்கள். 

உங்களது ஆர்வமிக்க உழைப்பு, ஆன்மீக வாழ்வில் காட்டும் ஆர்வம், சிறப்பாக அன்னையின் மாதமாகிய அக்டோபர் மாதத்தில் நமது தாய் அன்னை மரியாளின் பக்தியை அணைத்து இல்லங்களிலும், மனங்களிலும் விதைத்து ஆன்மீகத்தில் வளர எடுத்த அணைத்து முயற்சிகளுக்காகவும் வாழ்த்தி இன்னும் முன்னேறி செல்ல உற்சாகப்படுத்துகின்றோம். 

உலகின் படைப்பிற்கெல்லாம் சென்று நற்செய்தியை பறைசாற்றுங்கள் என்ற ஏசுவின் வார்த்தையை, நீங்கள் வாழும் நாட்டில் உங்களது செயலால் வாழ்வால் நீங்கள் நற்செய்திகளாக இருந்து சான்று பகரும் வாழ்வு வாழ உங்கள் அனைவரையும் வாழ்த்தி ஜெபிக்கின்றோம். 

வருகின்ற காலமும்  வசந்த காலமாகட்டும், அது உங்க

ள் வசமாகட்டும் என இறை அருளும் ஆசிரும் வேண்டி வாழ்த்தி மகிழ்கின்றோம்.

 

Gosnells' புனித  மரியின் ஊழியர் சபை சகோதரிகள்,

சகோ, பாத்திமா மேரி

சகோ, கிறிஸ்டினா மேரி

சகோ, ஸ்டெல்லா மேரி

சகோ, சவரி மேரி

5.png
bottom of page